Saturday, July 20, 2013

“உழைக்கும் முதியோர்” - ‘தி ஹிந்து’ ஷட்டர்பக் அகில இந்தியப் புகைப்படப் போட்டி

No comments:
 

தி இந்து நாளிதழின் ஷட்டர்பக் அறிவித்திருக்கும் அகில இந்திய அளவிலான இம்மாதப் போட்டி ‘உழைக்கும்  முதியோர்’.

வயிற்றுக்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் சிலர்; உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் மன பலத்துடன் வாழும் வரை தன் காலில் நிற்கவேண்டும் என்கிற உறுதியோடு சிலர்; தள்ளாத வயதிலும் குடும்பத்துக்கான தம் பங்களிப்பைக் கொடுத்தாக வேண்டிய சூழலில் சிலர் எனக் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் நாடெங்கிலும் இவர்களது எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

இது குறித்த ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்துடன் பிர்க்பெக் பல்கலைக் கழகம், லண்டன் மற்றும்  மனித உரிமை காப்புறுதி ஆய்வு மையம், சென்னை ஆகியவற்றோடு கை கோர்த்து ‘தி ஹிந்து’  இப்போட்டியை அறிவித்திருக்கிறது.  இந்நிலையில் மாற்றம் கொண்டு வர இந்த ஆய்வு உதவும் என நம்புகிறது.

பரிசு விவரங்கள்:

முதல் பரிசு ரூ.20000/-, இரண்டாம் பரிசு ரூ.10000/-; மூன்றாம் பரிசு ரூ. 5000/- மற்றும் 3 ஆறுதல் பரிசு பெறுகின்றவருக்குப் பாராட்டுப் பத்திரங்கள். வந்துபடியே இருக்கும் ஆயிரக்கணக்கான படங்களில் அதிக வாக்கு பெறும் ஒரு படத்துக்கு ரூ.5000/-. உழைக்கும் முதியோர் நிலை குறித்த செய்தி எல்லோரையும் சென்றடைய வேண்டும், பலரும் படங்களை பார்வையிட வேண்டும் எனும் நோக்கத்துடன் வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் அமைப்பாளர்கள் அதற்கானக் கடைசித் தேதி 28 ஜூலை  இரவு 11 மணி வரையில் என அறிவித்து ஒருமாத காலம் ஒதுக்கியிருக்கிறார்கள். போட்டி முடிவுகள் 31 ஜூலை இணையத்திலும், 4 ஆகஸ்ட் பத்திரிகைகளிலும் வெளியாகும்.  விரிவாக இதைப் பற்றி அறிய இங்கேயும் விதிமுறைகளுக்கு இங்கேயும் செல்லலாம்.

விதிமுறைகள் தமிழில் இங்கேயும்:

படங்கள் அனுப்பக் கடைசித் தேதி, நாளை 21 ஜூலை இரவு 11 மணி .

* படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
* இந்தியாவுக்குள் கடந்த 12 மாதங்களுக்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
* ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
* படங்களின் அளவு 1.5 MB-க்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். அவர்கள் கேட்கும் பட்சத்தில் அதிக ரெசலூஷனில் (பிக்ஸலில்) கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
* உங்களுக்குப் பிடித்தமான எத்தனை படங்களுக்கும் வாக்களிக்கலாம். ஆனால் ஒருவர் ஒரு படத்துக்கே வாக்களிக்க இயலும்.
* இணையம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

பரிசுகளைத் தாண்டி, ஒரு நல்ல நோக்கத்துடன் நடைபெறுகிற போட்டிக்கு உங்கள் பங்களிப்பையும் தரலாமே. நாளை இரவு வரை இருக்கிறது நேரம்.
***


No comments:

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff