Sunday, August 16, 2015

போட்டோஷாப் : "Auto Levels" ஒரு பார்வை

No comments:
 
வணக்கம் பிட் மக்கா நலமா? இன்றைய கட்டுரையில் நாம் Auto Levels  பற்றி பார்க்க இருக்கிறோம்.பொதுவாக போட்டோஷாப்பில் பலராலும் பயன்படுத்தப்படும் ஒரு டூல் எது என்றால் அது Levels  எனலாம்.பொதுவாக Levels என்பது நமது படத்தின் Tonal range மற்றும் Color Balance சரி செய்துகொள்ள உதவும் ஒரு டூலாகும். 

** அதாவது உங்களுடைய படத்தின் Histogramமை வைத்து Shadows,Midtones,Highlights பாயிண்டுகளை தேவைக்கேற்றபடி அட்ஜெஸ்ட் செய்து படத்தை திருத்திக்கொள்ளலாம்.


அல்லது Levelsல் இருக்கும் Black,Gray,White Eyedropper டூலினைக்கொண்டு உங்களது படத்திலிருக்கும் கருப்பு,வெள்ளை மற்றும் கிரே புள்ளிகளை கண்டறிந்து திருத்திக்கொள்ளலாம்.

ஆனால் இதனை செய்ய போட்டோஷாப்பில் போதிய அனுபவம் வேண்டும். காரணம் தவறான புள்ளிகளை தேர்ந்தெடுத்துவிட்டால் படம் கெட்டுவிடும்சரி இதுகுறித்த விபரமான கட்டுரையை நான் பின்னாளில் தருகிறேன்.

இப்போதைக்கு போட்டோஷாப்பை ஆரம்பநிலையில் ழகுபவர்களுக்கு ஏதுவானதாக இருக்கவேண்டும் என்பதற்க்காக நான் Auto Levels பற்றி குறிப்பிட இருக்கிறேன்.
அதாவது கருப்பு மற்றும் வெள்ளைபுள்ளிகளை பயன்படுத்தத்தெரியாதவர்கள் மற்றும் Levels மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யதெரியாதவர்கள் Auto Levels நாடலாம்.

முதலில் நீங்கள் Correction செய்ய விரும்பும் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும்.இங்கு உதாரணத்திற்கு நான் திறந்து வைத்திருக்கும் படமானது மாலை வெயிலில் எடுக்கப்பட்ட படமாகும்


இங்கு என்னுடைய படத்தில் இருக்கும் Yellow நிற Colorcast சற்று இருப்பதை நான் பார்கிறேன். சரி இப்போது லேயர் பேனலில் இருக்கும் New Levels Adjustment Layer தேர்ந்தெடுக்கவும்.


இப்போது Levels பேனலில் இருக்கும் Auto என்பதை அழுத்தவும்.


பெரும்பாலும் Auto Levels எல்லா படத்திற்கும் நாம் எதிர்பார்க்கிற ரிசல்டை தருவது கிடையாது.இந்த படத்திற்கு நான் Auto Levelsஐவல்ஸை பயன்படுத்தியிருக்கிறேன்.எனினும் ரிசல்ட் எனக்கு திருப்தியாக இல்லை.காரணம் இந்த Auto Levels ஆனது பொதுவாக உங்களுடைய படத்திலிருக்கும் Brightness மற்றும் Contrast வைத்து மேம்படுத்துமாறு Default ஆக‌ வடிவமைக்கப்பட்டிருக்கும்சரி இந்த Auto Levesஐ கொஞ்சம் Fine Tune செய்து பார்க்கலாமா?

இப்போது நான் அதே Auto பட்டனை என்னுடைய விசைபலகையிலிருக்கும் ALT அழுதிக்கொண்டு கிளிக் செய்கிறேன்.

இப்போது போட்டோஷாப் Auto Levels எனக்கு மொத்தத்தில் 4 விதமான Alogorithms எனக்கு அளிக்கிறது. இப்போது நீங்கள் 4 ஆப்ஷன்களையும் சோதித்துப்பாருங்கள். உங்களுடைய படம் எந்த Algorithm அடிப்படையில் நீங்கள் விரும்பிய ரிசல்ட் தருகிறதோ அதனை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
என்னுடைய இந்தப்படத்தில் எனக்கு Find Dark&Light Colors Option நல்ல ரிசல்டை தருகிறது எனவே நான் அதனை தேர்வுசெய்துகொள்கிறேன்.அதே நேரத்தில் படத்திலிருக்கும் Color Cast ஐயும் நான் நீக்க விரும்புகிறேன். எனவே நான் Snap Neutral Midtonesஸையும் டிக் செய்கிறேன்.


இப்போது பாருங்கள் என்னுடைய படம் Auto Levels மூலமாக Color Cast நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.


என்ன "பிட்" வாசகர்களே Auto Levelsஸை எப்படி நேர்த்தியாக பயன்படுத்துவது என கற்றுக்கொண்டீர்களா??
நன்றி மீண்டும் ஒரு கட்டுரையில் சந்திக்கலாம்.
அன்புடன்,
நித்தி ஆனந்த்

No comments:

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff